சுவாசிக்கவே கஷ்டப்படும் உத்தரகாண்ட் மக்கள்.. அதிர வைக்கும் காரணம்

x

உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனின் ஜஜ்த்ரா பகுதியில், குளோரின் வாயு கசிவு ஏற்பட்டதைத் தொடர்ந்து, உள்ளூர் மக்களுக்கு சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டது. தகவல் அறிந்து போலீசார் மற்றும் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர், உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, குளோரின் வாயுவை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். இதனிடையே, வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்ட மக்களுக்கு, மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக, போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்