நாடாளுமன்ற அட்டாக்கில் `பிளான் B' - அதிர்ச்சி திருப்புமுனையான `துண்டுச்சீட்டு'..ஆதாரங்கள் அழிப்பு..

x

நாடாளுமன்றத்தில் வண்ணப் புகை வீசப்பட்ட விவகாரத்தில் விசாரணையை தீவிரமாக்கியிருக்கிறது டெல்லி சிறப்பு பிரிவு போலீஸ்...

மக்களவையில் வண்ணப் புகையை வீசிய மனோரஞ்சன், சாகர் சர்மா மற்றும் நாடாளுமன்றத்திற்கு வெளியே வண்ணப் புகையை வீசிய நீலம்,அமோல் ஷிண்டேவை 7 நாட்கள் காவலில் எடுத்துள்ளது.

சம்பவம் தொடர்பாக டெல்லி போலீஸ் பதிவு செய்திருக்கும் எப்.ஐ.ஆரில்... மனோரஞ்சன், சாகர் சர்மா அணிந்திருந்த ஷூவில் வண்ணப் பொடியை வீசும் கருவிகளை வைக்கும் வகையில் துளையிடப்பட்டு, தனியிடம் வடிவமைக்கப்பட்டு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்கள் வைத்திருந்த துண்டுச் சீட்டுகளில், ஜெய் ஹிந்த் வாசகம் மற்றும் மணிப்பூர் சம்பவம் தொடர்பான வாசகங்கள் இடம் பெற்று இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுபோக பிரதமர் மோடிக்கு எதிரான துண்டு சீட்டுகளும் அவர்களிடம் இருந்தததாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடியை காணவில்லை... அவரை கண்டுபிடித்து தருபவர்களுக்கு சுவிஸ் வங்கியிலிருந்து ரொக்கம் பரிசாக வழங்கப்படும்... என்ற வாசகங்கள் அதில் இடம் பெற்று இருந்ததாக போலீஸ் தரப்பில், வழக்கை விசாரிக்கும் என்.ஐ.ஏ. நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லி சிறப்பு படை போலீசின் 6 தனிப்படைகள் விசாரித்து வரும் வேளையில்...

சம்பவத்தில் முக்கிய குற்றவாளியாக கூறப்படும் லலித் ஜா டெல்லி போலீசில் சரணடைந்துள்ளார்.

அவரையும் டெல்லி சிறப்பு போலீஸ் விசாரிக்கும் சூழலில்... ஆதாரங்களை எல்லாம் அளித்துவிட்டதாக சொல்லியிருக்கிறார் லலித் ஜா... அதாவது நாடாளுமன்றத்தில் வண்ணப் புகை வீசப்பட்டதும் ராஜஸ்தானுக்கு பஸ்சில் தப்பிய லலித் ஜா, தன்னுடைய செல்போனையும், நண்பர்களது செல்போன் களையும் உடைத்து எரிந்துவிட்டதாக சொல்லியிருக்கிறார்.

இதைத் தொடர்ந்து அவருக்கு நெருக்கமான ராஜஸ்தானை சேர்ந்த மகேஷ், கைலாஷ் என இருவரை பிடித்து விசாரிக்கிறது டெல்லி போலீஸ்...

இதற்கிடையே அவர்களிடம் பிளான் பி-யும் இருந்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகியிருக்கிறது.

அதாவது நீலம் மற்றும் அமோல் ஷிண்டேவால் நாடாளுமன்ற வளாகத்திற்குள் செல்ல முடியவில்லை என்றால்.... மகேஷ் மற்றும் கைலாஷ் மற்றொரு வழியாக உள்ளே சென்று மீடியாக்கள் முன்பாக வண்ணப் பொடியை வீசி... எதிர்ப்பு கோஷங்களை எழுப்ப திட்டம் வகுக்கப்பட்டு இருந்தது தெரியவந்துள்ளது.

அவர்கள் தங்கள் பிளான் ஏ-யை வெற்றிகரமாக முடித்து இருக்கிறார்கள். இதன் தொடர்ச்சியாக லலித் ஜா மறைந்து கொள்வதற்கான பொறுப்பு மகேஷுக்கு ஒப்படைக்கப்பட்டு இருக்கிறது எனவும் தெரியவந்துள்ளது. அதன்படி லலித் ஜா...

ராஜஸ்தானில் ஹெஸ்ட் ஹவுசில் தங்க தனது அடையாள அட்டைகளை வழங்கி உதவியிருக்கிறார் மகேஷ்... தொடர்ச்சியாக கைலாஷ் மீடியாக்களில் வெளியாகிய தகவல்களை சேகரித்து இருக்கிறார் எனவும் போலீஸ் தரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.

டெல்லி சிறப்பு பிரிவு விசாரணையை விஸ்தரித்த சூழலில் மகேசும், கைலாசும் நாடாளுமன்ற வளாக போலீசில் சரண் அடைந்திருக்கிறார்கள்...

விவகாரத்தில் விசாரணை தொடரும் வேளையில் டெல்லி நாடாளுமன்றத்திலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருக்கிறது.


Next Story

மேலும் செய்திகள்