"ஒரே நாடு ஒரே வாக்காளர்" - இந்திய சட்ட ஆணையம் பரிந்துரை

x

நாடாளுமன்றம், சட்டமன்றம் உள்ளிட்ட அனைத்து தேர்தல்களுக்கும் பொதுவான வாக்காளர் பட்டியலை அறிமுகப்படுத்த இந்திய சட்ட ஆணையம் பரிந்துரைத்துள்ளதாக, நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ஒரே நாடு ஒரே வாக்காளர் பட்டியலை நடைமுறைப்படுத்த மத்திய அரசு பரிந்துரைத்துள்ளதா என அ.தி.மு.க எம்பி தம்பிதுரை கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள்ள மத்திய சட்டத்துறை இணையமைச்சர் அர்ஜூன் ராம் மெக்வால், நாடாளுமன்றம், சட்டமன்றம் மற்றும் உள்ளாட்சி தேர்தல் போன்றவற்றுக்கு பொதுவான வாக்காளர் பட்டியலை அறிமுகப்படுத்த இந்திய சட்ட ஆணையம் தனது 255-ஆவது அறிக்கையில் பரிந்துரைத்திருப்பதாக குறிப்பிட்டார். இந்த பரிந்துரை, சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகத்தின் நாடாளுமன்ற நிலைக்குழுவின் ஆய்வில் இருப்பதாகத் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்