நிபா வைரஸ் ஆட்டம் ஓயும் முன்னே ஆட்டிப்படைக்கும் அடுத்த காய்ச்சல்32 பேர் அட்மிட்.. மரண பீதியில் கேரளா

x

கேரள மாநிலம், கோழிக்கோடு மாவட்டத்தில் நிபா வைரஸ் பரவல் குறைந்துள்ளதால், 10 நாட்களுக்கு பிறகு பள்ளி, கல்லூரிகள் திங்கள்கிழமை திறக்கப்படவுள்ளன.

கோழிக்கோட்டில் நிபா வைரஸ் தொற்று பாதிப்பால் அடுத்தடுத்து 2 பேர் உயிரிழந்ததால், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களின் பட்டியலை தயார்செய்து, நோய் அறிகுறி உள்ளவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது. தொற்று பாதித்தவர்களின் தொடர்பில் இருந்ததாக ஆயிரத்து 200 பேர் கண்டறியப்பட்டனர். தொற்று பரவலை கட்டுப்படுத்தும் விதமாக கோழிக்கோடு மாவட்டத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், புதிதாக யாருக்கும் நிபா வைரஸ் பாதிப்பு இல்லை என்பதால், கோழிக்கோடு மாவட்டத்தில் கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டன. கடந்த 10 நாட்களாக கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்த நிலையில், மீண்டும் திங்கள்கிழமை திறக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இருப்பினும் கட்டுப்பாட்டு மண்டலங்களில் செயல்படும் பள்ளி, கல்லூரிகள் மட்டும் கட்டுப்பாடுகள் தொடரும் வரை ஆன்லைன் வகுப்புகளை நடத்த அறிவுறுத்தப்பட்டு உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்