இந்தியர்களுக்கு ஹேப்பி நியூஸ்... மலேசியா அரசு அதிரடி அறிவிப்பு

x

ஏற்கனவே இலங்கை, வியட்னாம், தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு செல்ல இந்தியர்களுக்கு விசா தேவையில்லை எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், டிசம்பர் 1-ஆம் தேதி முதல் இந்தியர்கள் மலேசியா வருவதற்கு விசா தேவையில்லை என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. குறிப்பாக 30 நாள்கள் வரை அங்கு தங்கும் நபர்களுக்கு விசா தேவையில்லை என வரையறுக்கப்பட்டுள்ளது. முன்னதாக அரேபியா, ஈரான், துருக்கி உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு மலேசியா செல்ல விசா தேவையில்லை என நடைமுறை இருந்து வருகிறது. அந்த பட்டியலில் தற்போது இந்தியாவும் இணைந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்