நேபாளத்தின் புதிய ரூ.100 நோட்டு... இந்தியாவில் வெடித்த பெரும் சர்ச்சை

x

இந்தியாவின் இடங்களை தமது பகுதிகளாக குறிப்பிட்டு நேபாளம் புதிய ரூபாய் நோட்டு வெளியிட்டுள்ள நிலையில், பிரதமர் மோடியை காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்சித்துள்ளது.

இந்தியாவின் அண்டை நாடான நேபாளம், புதிய 100 ரூபாய் நோட்டை வெளியிட்டுள்ளது. அதில், ஏற்கனவே இருந்த நேபாளத்தின் வரைபடத்தை மாற்றிவிட்டு, இந்திய பகுதிகளான காலாபாணி, லிம்பியதுரா, லிபுலேக் போன்ற பகுதிகளை தங்களது பகுதியாக நேபாளம் குறிப்பிட்டுள்ளது. இந்த பகுதிகளுக்கு, கடந்த சில ஆண்டுகளாக நேபாளம் உரிமை கொண்டாடி வருவதால், இரு நாடுகளிடையே தகராறு நீடித்து வருகிறது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெயராம் ரமேஷ், காங்கிரஸ் ஆட்சியில் இப்படி நடந்திருந்தால், 56 இன்ச் மார்பை கொண்டவர் எப்படி எல்லாம் கத்தியிருப்பார் என்று கற்பனை செய்து பார்க்க முடியுமா என்று விமர்சித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்