NCB தலைமை கண்காணிப்பு அதிகாரி நீக்கம் - மத்திய அரசு உத்தரவு

x

ஞானேஷ்வர் சிங்குக்கு பதிலாக மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு தலைமையகத்தின் சிறப்பு பிரிவின் துணை தலைமை இயக்குநராக உள்ள நீரஜ் குமார் குப்தாவை, போதைப்பொருள் தடுப்பு பிரிவின் தலைமை கண்காணிப்பு அதிகாரி நியமித்து, மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. ஹிந்தி நடிகா் ஷாருக்கானின் மகன் ஆா்யன்கானை, போதைப்பொருள் வழக்கில் சிக்க வைக்காமல் இருக்க 25 கோடி ரூபாய் லஞ்சம் கேட்டதாக முன்னாள் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரி சமீா் வான்கடே மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. இதன்பேரில் மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு சார்பிலும், ஞானேஷ்வர் சிங் தலைமையில் சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. இதனிடையே, சிறப்பு விசாரணைக் குழு அறிக்கைக்கு எதிராக, சமீர் வான்கடே தாக்கல் செய்த மனுவை விசாரித்த மத்திய நிர்வாக தீர்ப்பாயம், சிறப்பு விசாரணைக் குழுவில் ஞானேஷ்வர் இடம்பெற்றிருந்திக்க கூடாது என கடந்த ஆண்டு ஆகஸ்ட்டில் உத்தரவிட்டது. இந்த உத்தரவுக்கு எதிராக ஞானேஷ்வரின் மறுஆய்வு மனுவையும் மத்திய நிர்வாக தீர்ப்பாயம் தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்