டெல்லியில் நமாஸ் செய்தவர்களை உதைத்த காவலர் - வெளியான பரபரப்பு வீடியோ

x

டெல்லியில் சாலையில் நமாஸ் செய்தவர்களை காலால் எட்டி உதைத்த காவல் அதிகாரியை சஸ்பெண்ட் செய்துள்ளதாக, காவல் துணை ஆணையர் மனோஜ் குமார் மீனா அறிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்தர் லோக் பகுதியில் சாலையில் நமாஸ் செய்தவர்களை, பணியில் இருந்த காவல் அதிகாரி எட்டி உதைத்த வீடியோ வெளியானதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து அந்த காவல் அதிகாரியை சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாகவும், அவர் மீது ஒழுங்கு நடவடிக்கைக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் துணை ஆணையர் கூறியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்