அதிவேகமாக வந்த சொகுசு கார்..தூக்கி வீசப்பட்ட டிராபிக் போலீஸ் - நெஞ்சை பதறவைக்கும் காட்சிகள்

x

டெல்லி கனாட் பிளேஸ் பகுதியில் உள்ள சாலையில் அதிவேகமாக வந்த சொகுசு கார் மோதியதில் போக்குவரத்து காவலர் தூக்கி வீசப்பட்டார். கடந்த 24ம் தேதி இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. போக்குவரத்து காவலரை மோதியதோடு மட்டுமின்றி, மற்றுமொரு வாகனத்தையும் அந்த கார் மோதியுள்ளது. தப்ப முயன்ற கார் ஓட்டுநரை காவலர்கள் விரட்டிப் பிடித்து கைது செய்து வாகனத்தைப் பறிமுதல் செய்தனர். படுகாயம் அடைந்த காவலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பிய நிலையில், விபத்து பதிவான பரபரப்பான வீடியோ காட்சி வெளியாகியுள்ளது


Next Story

மேலும் செய்திகள்