பிரபல இயக்குனர் வீட்டில் திருட்டு... தங்க, வைர நகைகளை அள்ளிச் சென்ற கும்பல்..

x

பிரபல இயக்குனர் வீட்டில் திருட்டு... தங்க, வைர நகைகளை அள்ளிச் சென்ற கும்பல்.. பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்

#Kerala #Theft #ThanthiTv

கேரளாவில், மலையாள திரைப்பட இயக்குநரின் வீட்டில் இருந்து ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் மற்றும் வைர நகைகள் திருடுபோன சம்பவத்தில், கொள்ளையனை போலீசார் கைது செய்தனர். மலையாள சினிமா இயக்குநரான ஜோஷியின் வீடு, கொச்சி பனம்பள்ளி நகரில் உள்ளது. அதிகாலை வேளையில் இவரது வீட்டில் உள்ளே நுழைந்த மர்மநபர்கள், பீரோவில் இருந்த ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் மற்றும் வைர நகைகள், கைக் கடிகாரம் உள்ளிட்டவை கொள்ளையடித்துச் சென்றனர். இதுதொடர்பான புகாரின் பேரில், வீட்டில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், கர்நாடாக மாநிலம் உடுப்பியில் பதுங்கி இருந்த முகமது இர்ஷாத் என்பவரை கைது செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்