களைகட்டிய ஆற்றுக்கால் பொங்கல் விழா - மக்கள் வெள்ளத்தில் மூழ்கிய ரயில்நிலையம்

x

பெண்களின் சபரிமலை என அழைக்கப்படும் திருவனந்தபுரம் ஆற்றுகால் கோயிலில் பொங்கல் விழா நடைபெற்றது. இதில், கேரளா, தமிழகம், கர்நாடகாவில் இருந்து இரண்டு நாட்களாக வந்திருந்த பெண்கள், காலையில் பொங்கலிட்டு வழிபட்டனர். விழா முடிந்து பெண்கள் அனைவரும் சொந்த ஊர் செல்வதற்காக ஒரே நேரத்தில் குவிந்ததால் ரயில் நிலையம் ஸ்தம்பித்தது. கேரள போலீசாரும், ரயில்வே போலீசாரும் நெரிசலை கட்டுப்படுத்தி ரயிலில் பயணம் செய்வதற்கு ஏற்பாடு செய்தனர். இதற்கிடையே, விழாவை தொடக்கி வைக்க வந்த கேரள அமைச்சர் அனில் குமார், பொங்கல் வைத்த பெண்களிடம் அடிப்படை வசதிகளை கேட்டறிந்து விட்டு, பரபரப்பின்றி புறப்பட்டுச் சென்றார்


Next Story

மேலும் செய்திகள்