கடல் சீற்றத்திலும் உற்சாக குளியல்..காரைக்கால் கடற்கரையில் அலைமோதும் சுற்றுலா பயணிகள்

x

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் விடுமுறை காரணமாக பல்வேறு சுற்றுலாத் மையங்கள், வழிபாட்டுத் தலங்கள், கடற்கரை பூங்கா உள்ளிட்டவைகளை சுற்றுலா தளங்களில் பொதுமக்கள் குவிந்து வருகின்றனர். இந்த நிலையில் புதுச்சேரி மாநிலம் காரைக்கால் கடற்கரையில் தற்போது கடல் அலை சீற்றத்துடன் காணப்பட்டு காற்றின் வேகம் அதிகரித்து இருந்து வருகிறது இந்நிலையிலும் பள்ளிகள் அரையாண்டு விடுமுறை கிறிஸ்துமஸ் தொடர விடுமுறை மற்றும் இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதாலும் திருநள்ளாறுக்கு கோவிலுக்கு வந்த பக்தர்கள் காலை சுவாமி தரிசனம் செய்துவிட்டு மாலை கடற்கரையிலும் என ஐந்து ஆயிரத்திற்கு மேற்பட்ட சுற்றுலா பயணிகள் பொதுமக்கள் குவிந்து வருகின்றனர். மேலும் அண்டை மாவட்டங்களான நாகப்பட்டினம் திருவாரூர் மயிலாடுதுறை மாவட்டங்களை சேர்ந்தவர்கள் காரைக்கால் கடற்கரையில் குவிந்து வருகின்றனர். மேலும் காரைக்கால் கடற்கரை மற்றும் பூங்காக்களில் பொதுமக்கள் பெண்கள் என குழந்தைகள் உள்ளிட்டவர்கள் விளையாடி தங்கள் உறவினருடன் விடுமுறையை சிறப்பாகக் கொண்டாடி வருகின்றனர். மேலும் காரைக்கால் கடலில் பெண்கள் குழந்தைகள் என கடலில் குளித்து தங்களது மகிழ்ச்சி வெளிப்படுத்தி வருகின்றனர். ஆழப் பகுதிக்கு சென்று குளித்து வருவார்களே போலீசார் கடற்கரையில் நின்று அவர்களை சத்தமிட்டு அப்புறப்படுத்தி வருகின்றனர். மேலும் மாலை நேரத்தில் மீன்பிடித்து துறைமுகத்துக்கு திரும்பி வரும் மீனவர்கள் படகுகளை முகத்துவாரத்தில் இருந்து சுற்றுலா பயணிகள் செல்பி எடுத்து மகிழ்ந்து வருகின்றனர். தற்போது அதிகளவு சுற்றுலா பயணிகள் வருவது காரணமாக காரைக்கால் கடற்கரை மக்கள் வெள்ளத்தால் வெகு நாட்களுக்குப் பிறகு திருவிழாக் கோலம் போல காட்சியளிக்கிறது. மேலும் கடற்கரை சாலையில் போக்குவரத்து பாதிப்பும் ஏற்படுத்தி உள்ளது சுற்றுலா பயணிகள் அதிகம் வருவதால் காரைக்கால் கடற்கரை சுற்றி மாவட்ட கண்காணிப்பாளர் சுப்ரமணியன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்