ஆபத்தில் முடிந்த இன்ஸ்டா நட்பு - கசிந்த ரகசிய வீடியோக்கள்.. - தலையில் விழுந்த பேரிடி..

x

சென்னையை சேர்ந்தவர் தினேஷ்குமார். இவர் புதுச்சேரியை சேர்ந்த பெண் ஒருவருடன், இன்ஸ்டாகிராம் மூலம் நட்பாகி பழகி வந்த நிலையில், பெண்ணை வீடியோ காலில் வரவழைத்து நிர்வாணமாக படம் பிடித்திருக்கிறார். இதனால், தினேஷ்குமாருடன் அந்த பெண் பழகுவதை நிறுத்தியதால், சம்பந்தப்பட்ட வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிட்டு விடுவதாக மிரட்டிய தினேஷ், வீடியோக்களை தனது நண்பர் மற்றும் பெண்ணின் தோழிகளுக்கு அனுப்பியதாக கூறப்படுகிறது. இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குபதிவு செய்த போலீசார், சென்னையை சேர்ந்த இளைஞர்களான தினேஷ்குமார் மற்றும் அருண்பாண்டியனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்