இளம்பெண்ணுடன் இன்ஸ்டாவில் சேட்டை... நிர்வாண கோலத்தில் வீடியோ கால் - 'லவ் டுடே' பட பாணியில் சம்பவம்..

x

இளம்பெண்ணுடன் இன்ஸ்டாவில் சேட்டை... நிர்வாண கோலத்தில் வீடியோ கால் - 'லவ் டுடே' பட பாணியில் நடந்த சம்பவம்..

மகப்பேறுக்காக மனைவி தாய் வீட்டிற்கு சென்ற நிலையில், இளம்பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து நிர்வாண கோலத்தில் வரச்சொல்லி மிரட்டிய இளைஞரை புதுச்சேரி போலீசார் கைது செய்தனர். புதுச்சேரியை சேர்ந்த இளம்பெண் ஒருவருடன் இன்ஸ்டாகிராமில் பழகிய நபர், அவரது புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து அவருக்கு அனுப்பியதாக தெரிகிறது. தொடர்ந்து குறிப்பிட்ட செல்போன் எண்ணை அனுப்பி, நிர்வாணமாக அழைக்கச் சொல்லி மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து புதுச்சேரி சைபர் கிரைம் போலீசாரிடம் புகாரளித்த நிலையில், செல்போன் எண்ணை டிராக் செய்து திருக்கோவிலூரில் வைத்து அவரை கைது செய்தனர். விசாரணையில் கள்ளக்குறிச்சியை சேர்ந்த அவர், மனைவி பிரசவத்திற்காக தாய் வீட்டிற்கு சென்ற நிலையில், இச்செயலில் ஈடுபட்டது தெரியவந்தது.


Next Story

மேலும் செய்திகள்