இந்தியாவுக்கு வந்த கப்பலை தாக்கிய ட்ரோன் - சீறி வந்து காப்பாற்றிய இந்திய கப்பல்

x

இந்திய கடல் எல்லை அருகே ட்ரோன் மூலமாக தாக்குதல் நடத்தப்பட்ட கெம் புளூட்டோ (CHEM Pluto) கப்பல், இந்திய கடலோர காவல் படை மற்றும் இந்திய கடற்படை ஆகியவற்றின் கப்பல்களின் உதவியுடன் பாதுகாப்பாக மும்பை துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டிருக்கிறது. சவுதி அரேபியாவில் இருந்து மங்களூருக்கு ரசாயனப் பொருட்களை ஏற்றி வந்த அந்த கப்பல், குஜராத் கடற்பகுதியில் வந்தபோது, ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. இதையடுத்து, விரைந்து சென்ற இந்திய கடற்படையின் விக்ரம் கப்பல், அந்த கப்பலை மீட்டு மும்பை துறைமுகத்துக்கு அழைத்து வந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்