முதல் டி20 போட்டி ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி

x

மொகாலியில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பவுலிங் தேர்வு செய்தார். தொடர்ந்து பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி, 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 158 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக முகமது நபி 42 ரன்கள் எடுத்தார். இந்திய அணி தரப்பில் முகேஷ் குமார் மற்றும் அக்சர் படேல் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். பின்னர் 159 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணியில் கேப்டன் ரோகித் சர்மா ரன் ஏதும் எடுக்காமல் ரன்-அவுட் ஆனார். கில் 23 ரன்களும் திலக் வர்மா 26 ரன்களும் எடுத்தனர். ஷிவம் துபே - ஜிதேஷ் சர்மா ஜோடி சிறப்பாக ஆடியது. ஜிதேஷ் சர்மா 31 ரன்களுக்கு ஆட்டமிழக்க, துபே அரைசதம் அடித்தார். 17 புள்ளி 3 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்த நிலையில் இலக்கை எட்டிய இந்தியா, 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. மேலும், 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்தியா 1க்கு பூஜ்யம் என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது


Next Story

மேலும் செய்திகள்