"இந்தியாவின் மசாலாவை பயன்படுத்த வேண்டாம்" - வெளியான பரபரப்பு உத்தரவு

x

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மசாலாவில், அதிக ரசாயனம் இருப்பதாக‌க் கூறி சிங்கப்பூர் அரசு கடும் உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. மீன் கறி மசாலாவில், அனுமதிக்கப்பட்ட வரம்பை மீறி எத்திலீன் ஆக்சைடு இருப்பதாக சிங்கப்பூர் உணவு முகமை தெரிவித்துள்ளது. இதையடுத்து, மீன் கறி மசாலாவை, சந்தைப்படுத்தல் மையங்களில் இருந்து திரும்ப‌ப் பெற இறக்குமதியாளருக்கு உத்தரவிட்டுள்ளது. இந்த தயாரிப்புகளை வாங்கிய வாடிக்கையாளர்கள் அதை பயன்படுத்த வேண்டாம் என்றும், வாங்கும் இடத்தை தொடர்புகொண்டு விசாரணைகளை மேற்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது..


Next Story

மேலும் செய்திகள்