IND Vs ENG.. முதல் டெஸ்ட்டில் முன்னிலை.. அதிரடி காட்டிய இந்தியா

x

இங்கிலாந்துக்கு எதிராக ஹைதராபாத்தில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா முதல் இன்னிங்ஸில் 175 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

2ம் நாள் ஆட்ட முடிவில் இந்தியா 7 விக்கெட் இழப்புக்கு 421 ரன்கள் சேர்த்துள்ளது. 2ம் நாள் ஆட்டத்தில் கே.எல்.ராகுல் சிறப்பாக விளையாடி 86 ரன்கள் எடுத்தார். பரத் 41 ரன்களும் ஷ்ரேயாஸ் ஐயர் 35 ரன்களும் சேர்த்தனர். அரைசதம் அடித்த ஜடேஜா 81 ரன்களுடனும், அக்சர் படேல் 35 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். 3ம் நாள் ஆட்டம் நாளை காலை 9.30 மணிக்கு தொடங்கவுள்ள நிலையில், முதல் இன்னிங்சில் இங்கிலாந்தைக் காட்டிலும் 175 ரன்கள் முன்னிலை பெற்று இந்தியா வலுவான நிலையில் உள்ளது


Next Story

மேலும் செய்திகள்