கண் இமைக்கும் நேரத்தில் கழுத்தை சுற்றி வளைத்து நெரித்த மலைப்பாம்பு - நெஞ்சை நிறுத்தும் காட்சிகள்

x

கேரள மாநிலம் கண்ணூரில், இளைஞர் ஒருவர் மதுபோதையில் மலைப்பாம்பை கையில் பிடித்தபடி, பெட்ரோல் பங்குக்கு வந்தால் பரபரப்பு ஏற்பட்டது. வளப்பட்டினம் சுங்கச்சாவடி அருகே, மதுபோதையில் இருந்த இளைஞர் ஒருவரின் மீது மலைப்பாம்பு சுற்றிக் கொண்டதாக தெரிகிறது. இதை பொருட்படுத்தாத அவர், அருகே உள்ள பெட்ரோல் பங்குக்கு வந்தார். அப்போது, திடீரென அந்த மலைப்பாம்பு இளைஞரின் கழுத்தை சுற்றி இறுக்கியது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பெட்ரோல் பங்க் ஊழியர்கள், பாம்பை கழுத்தில் இருந்து துணிச்சலாக அகற்றினர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்