காருக்கு ஹெலிகாப்டர் வேஷம் - கடுப்பான போக்குவரத்து துறை - Room.. போட்டு யோசிப்பாங்களோ

x

உத்தரபிரதேச மாநிலம் அம்பேத்கர் நகரைச் சேர்ந்த 2 சகோதரர்கள் பழைய காரை ஹெலிகாப்டரைப் போல் மாற்றி வடிவமைத்துள்ளனர்... அக்பர்பூர் பேருந்து நிலையம் அருகே அவர்களின் புதிய ரக வாகனத்தைக் கண்ட போக்குவரத்து போலீஸார் அதை பறிமுதல் செய்தனர்... போக்குவரத்து விதிகளை மீறியதுடன், சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் அனுமதி இல்லாமல் மாற்றங்களைச் செய்ததற்காக வாகனம் பறிமுதல் செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது... எனினும், அபராதம் செலுத்திய பின்னர் போலீஸார் வாகனத்தை விடுவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்