கொட்டி தீர்த்த மழை.. அணைகளில் அதிகரித்த நீர்வரத்து.. குஷியான விவசாயிகள்

x

கர்நாடகாவின் கபினி மற்றும் கேஆர்எஸ் அணைகளில் நீர் வெளியேற்றத்தின் அளவு நேற்று ஆயிரத்து 67 கன அடியாக இருந்த நிலையில் இன்று காலை நிலவரப்படி ஆயிரத்து 652 கன அடியாக அதிகரித்துள்ளது. தொடர் மழையால் நீர்வரத்து அதிகரித்துள்ள நிலையில், அதிகளவு நீர் வெளியேற்றப் படுகிறது. கேஆர்எஸ் அணைக்கு நீர் வரத்தின் அளவு நேற்று 688 கன அடியாக இருந்த நிலையில் இன்று ஆயிரத்து 90 கன அடியாகவும், கபினி அணைக்கு நேற்று 815 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று 2 ஆயிரத்து 485 கன அடியாகவும் உயர்ந்துள்ளது.

மேற்கு மாவட்டங்களான சேலம், திருப்பூர், ஈரோடு, நாமக்கல் போன்ற மாவட்டங்களில் கன மழை பெய்து வருவதால், கரூர் மாவட்டம் மாயனூர் காவிரி கதவணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 2 ஆயிரத்து 986 கன அடி வீதம் அதிகரித்துள்ளது. கதவணையில் இருந்து பிரிந்து செல்லும் 4 பிரதான வாய்க்கால்களில் தண்ணீர் திறப்பு நிறுத்தப் பட்டுள்ளது. காவிரி ஆற்றில் வரும் தண்ணீர் அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் திருச்சி, தஞ்சை, நாகை டெல்டா பகுதி விவசாயிகள், மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்