"தானியங்களை பதுக்கும் அதானி" - முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக் பரபரப்பு குற்றச்சாட்டு

x

தொழிலதிபர் அதானி, தானியங்களை குறைந்த விலைக்கு வாங்கி, மிகப்பெரிய கிடங்குகளில் சேமித்து வைத்து, விலை உயரும்போது விற்று விடுவார் என்று ஜம்மு காஷ்மீர் முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக் கூறியுள்ளார்.

பல்வேறு விவகாரங்களில் வெளிப்படையாக கருத்து தெரிவிக்கும் சத்யபால் மாலிக், காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியுடன் உரையாடியுள்ளார். அந்த உரையாடல் தொகுப்பு, சமூக ஊடகங்களில் வெளியாகி உள்ளது. அதில், புல்வாமாவில் ராணுவ வீரர்கள் 5 விமானங்கள் கேட்டதாகவும், அவர்களின் கோரிக்கையை மத்திய அரசு கிடப்பில் போட்டிருந்த நிலையில், வெடிகுண்டு தாக்குதல் சம்பவம் நடபெற்றதாக கூறினார். அதானி விவகாரம் குறித்து பேசுகையில், அதானி பல்வேறு இடங்களில் மிகப்பெரிய சேமிப்பு கிடங்குகளை அமைத்திருப்பதாகவும், மிகக்குறைந்த விலையில் உணவு தானியங்களை வாங்கி அவற்றில் சேமித்து வைத்து, விலை உயரும் போது விற்று வருவதாகவும் அவர் கூறினார். மணிப்பூரில் அரசு தோல்வி அடைந்து விட்டதாகவும், அங்கு முதல்வர் செல்ல முடியாத நிலையில், அவர் பதவி நீக்கம் செய்யப்படவில்லை என்று சத்யபால் மாலிக் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்