இந்தியர்களுக்கு குட் நியூஸ்.. சிவப்பு கம்பளம் விரிக்கும் ஈரான்

x

இந்தியா, ரஷ்யா, சவுதி அரேபியா, கத்தார், ஜப்பான், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட 33 நாடுகளிலிருந்து ஈரான் வருவதற்கு விசா தேவை இல்லை என விசா நடைமுறையிலிருந்து விலக்கு அளித்து அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. சுற்றுலாவை ஊக்கப்படுத்துதல் மற்றும் உலகளாவிய சுற்றுலாப் பயணிகளை ஈர்த்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் பாரம்பரிய, கலாச்சார, சுற்றுலாத் துறை அமைச்சர் எஸ்ஸா தொல்லாஹ் ஜார்கமி தெரிவித்துள்ளார். ஏற்கனவே அண்மையில் இலங்கை, இந்தோனேசியா, மலேசியா உள்ளிட்ட நாடுகள் தங்கள் நாடுகளுக்கு வருகை தருவதற்கு இந்தியர்களுக்கு விசா தேவை இல்லை என விலக்கு அளித்திருந்த நிலையில் அப்பட்டியலில் ஈரானும் இணைந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்