சந்திரன் முதல் சூரியன் வரை.. உலக நாடுகளை மிரள வைக்கும் இஸ்ரோ... பறக்க தயாராக இருக்கும் ஆதித்யா எல்1
வரும் 2ஆம் தேதி ஆதித்யா எல்1 செயற்கைக்கோள் ஏவப்படும் செய்தி மகிழ்ச்சி அளிப்பதாக, இஸ்ரோ முன்னாள் தலைவர் மாதவன் நாயர் தெரிவித்துள்ளார். சந்திரயான் திட்டத்தின் வெற்றிக்குப் பிறகு, சூரிய குடும்பத்தை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்படும் இந்த திட்டம் முக்கியமான படி என்று அவர் கூறியுள்ளார். சூரியனின் மேற்பரப்பில் நிகழும் பல்வேறு மாற்றங்கள் மற்றும் அதனால் ஏற்படும் விளைவுகளைப் பற்றி அறிவது ஆதித்யா எல்1 திட்டத்தின் இலக்கு என்றும், லாக்ராஞ்சியன் புள்ளியின் நிலைநிறுத்தப்பட்டு ஆய்வை மேற்கொள்ளும் என்றும் மாதவன் நாயர் தெரிவித்துள்ளார்.
Next Story