சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு வெளியான நியூஸ் | sabarimala

x

சபரிமலையில் வரும் 21-ம் தேதி காலை நடை அடைக்கப்படும் நிலையில், நாளை இரவு வரை மட்டுமே பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர்.

சபரிமலையில் மகரவிளக்கு பூஜை நிறைவடைந்த நிலையிலும், பக்தர்கள் தொடர்ந்து குவிந்து வருகின்றனர். நாளையுடன் மண்டல மற்றும் மகரவிளக்கு காலம் நிறைவடைகிறது. இதனால் நாளை இரவு வரை மட்டுமே பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். இன்றுடன் நெய் அபிஷேகம் நிறைவடைவதால், பக்தர்கள் அதிக அளவில் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. நாளை இரவு 10 மணிக்கு ஹரிவாரசனம் பாடி நடை அடைக்கப்பட்டு, மாளிகைபுரத்தம்மன் கோயில் குருதி பூஜை நடத்தப்படும். 21-ம் தேதி அதிகாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, 5.30 மணியளவில் திருவாபரணம் பந்தளத்திற்கு திருப்பி அனுப்பி வைக்கப்படும். தொடர்ந்து காலை 6 மணியளவில் சபரிமலை கோயில் நடை சாத்தப்படும். மீண்டும் மாசி மாத பூஜைகளுக்காக கோயில் நடை பிப்ரவரி 13-ம் தேதி திறக்கப்பட உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்