சிலிண்டர் கிடங்கில் தீ விபத்து... வெடித்து சிதரும் பரபரப்புக் காட்சி... சிலிண்டர்கள் வெடித்து சேதம்

x

மக ாராஷ்டிரா மாநிலம் புனேவில் சிலண்டர் கிடங்கில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டு, சிலிண்டர் வெடித்து சிதறியதால் பரபரப்பு ஏற்பட்டது. விமன் நகரில் செயல்பட்டு வந்த ஒரு கிடங்கில் 100க்கும் மேற்பட்ட சிலிண்டர்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அங்கு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனால், அங்கு இருந்த சிலிண்டர் பெரும் சத்த‌த்துடன் வெடித்த‌தால், அருகில் இருந்த மக்கள் அச்சமடைந்தனர். தகவலறிந்து சென்ற தீயணைப்புத்துறையினர், தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இந்த விபத்தில் 10க்கும் மேற்பட்ட சிலிண்டர்கள் வெடித்து சேதமாயின. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. விபத்துக்கான காரணங்கள் என்ன என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்