`புதுச்சேரியில்' நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் போட்டியிட வாய்ப்பு

x

`புதுச்சேரியில்' நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் போட்டியிட வாய்ப்பு

புதுச்சேரி மக்களவை தொகுதியில், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் போட்டியிட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. புதுச்சேரியில் பாஜக வேட்பாளரை இறுதி செய்ய முதல்வர் ரங்கசாமி, மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி ஆகியோர் ஆலோசனை நடத்தினர். அப்போது பாஜக தரப்பில் பரிந்துரைக்கப்பட்ட மூன்று பெயர்களில், நிர்மலா சீதாராமன் பெயர் முதலிடத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. புதுச்சேரியை சார்ந்தவர்கள் தேர்தலில் போட்டியிட தயக்கம் காட்டுவதால், அவர் போட்டியிட வாய்ப்பு அதிகமுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்