150 அடி ஆழத்தில் தவிக்கும் உயிர்.. தமிழகத்திற்கு நிறுத்தப்பட்ட தண்ணீர் - வெளியான திக் திக் காட்சி

x

முல்லைப் பெரியாறு அணையில் அதிர்ச்சி - 150 அடி ஆழத்தில் தவிக்கும் உயிர்.. தமிழகத்திற்கு நிறுத்தப்பட்ட தண்ணீர் - வெளியான திக் திக் காட்சி

முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடும் சட்டர் பகுதிக்கு முன்பாக ஒரு இரும்பு தடுப்பின் முன்பு அப்பகுதியில் உணவுக்காக உலாவி வந்த யானை 150 அடி ஆழத்தில் தவறி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது... தமிழகத்திற்கு ஆயிரத்து 200 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ள நிலையில், யானை நீந்தி வர முடியாமல் இழுத்துச் செல்லப்படுகிறது... இதனால் தமிழகத்திற்கு திறந்து விடும் தண்ணீர் நிறுத்தப்பட்டு நீர் வரும் வழித்தடம் வழியாக யானை செல்வதற்கான வேலைகளை தமிழ்நாடு பொதுப்பணித்துறை மற்றும் கேரள வனத்துறையினர் செய்தனர்... இதனால் நல்வாய்ப்பால நீர் வழித்தடத்தின் வழியாக நீந்தி சென்று யானை கரை ஏறியது...


Next Story

மேலும் செய்திகள்