அமலான CAA.. நடைமுறை இனி இப்படி தான்.. தெரிஞ்சி வச்சிக்கோங்க

x

குடியுரிமை திருத்தச் சட்டத்தின் கீழ் குடியுரிமை கோரி விண்ணப்பிக்கும் நபர்களின் விண்ணப்பத்தை எவ்வாறு மதிப்பாய்வு செய்யப்படும் என்ற விவரங்கள் வெளியாகியுள்ளன.

குடியுரிமை திருத்தச் சட்டம் விதிகள், விண்ணப்பதாரர்களின் தகுதியை கண்டறிய, விண்ணப்பங்களை மதிப்பாய்வு செய்ய அதிகாரமளிக்கப்பட்ட குழுவை அமைக்க அனுமதிக்கின்றன.

மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில், மக்கள் தொகை கணக்கெடுப்பின் இயக்குனர் தலைமையில் இந்த அதிகாரம் அளிக்கப்பட்ட குழு செயல்படும்.

பொது தபால் மாஸ்டர், தேசிய தகவல் மையத்தின் மாநில தகவல் அலுவலர் உள்ளிட்டோர், இந்த குழுவில் இதர உறுப்பினர்களாக செயல்படுவர்.

விண்ணப்பதாரர், அதிகாரமளிக்கப்பட்ட குழுவிற்கு மின்னணு வடிவத்தில் பதிவு செய்ய விண்ணப்பிக்க வேண்டும்.

பின்னர், மாவட்ட அளவிலான குழு, விண்ணப்பத்துடன் விண்ணப்பதாரர் சமர்ப்பித்த ஆவணங்களை சரிபார்க்கும்.

விசாரணைக்குப் பிறகு தகுதியான நபர் என அதிகாரமளிக்கப்பட்ட குழு திருப்தி அடைந்தால், விண்ணப்பதார‌ருக்கு இந்திய குடியுரிமையை வழங்கலாம் என்று குடியுரிமை திருத்த விதிகள் தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்