மெல்லமெல்ல மாறும் டெல்லியின் நிலை - விலகியது முக்கியமான கட்டுப்பாடுகள்..!

x

டெல்லியில் காற்றின் தரம் சற்று மேம்பட்டதை தொடர்ந்து கனரக வாகனங்கள் நுழைவது உள்ளிட்ட தடைகள் நீக்கப்பட்டுள்ளன.

டெல்லியில் இன்று காலை காற்றின் தரக் குறியீடு 290 என்ற அளவில் பதிவாகி, மிக மோசமான பிரிவிலிருந்து "மோசமான" பிரிவு என்ற நிலையில் பதிவாகியுள்ளதாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. இதன்மூலம் காற்றின் தரம் சற்று மேம்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அனைத்து அவசரகால நடவடிக்கைகளையும் திரும்பப்பெறுமாறு டெல்லி மற்றும் அண்டை மாநிலங்களை காற்றின் தர மேலாண்மை ஆணையம் கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் கட்டுப்பாடுகள் நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி CNG, மின்சாரம் மற்றும் BS வகை வாகனங்கள், பிற மாநிலங்களில் இருந்து டெல்லிக்குள் நுழைய அனுமதிக்கப்படுகின்றன. அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடுபவர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

அதேசமயம், அத்தியாவசியமற்ற கட்டுமானப் பணிகள், சுரங்கம், கல் நொறுக்கிகள் மற்றும் டீசல் ஜெனரேட்டர்களுக்கான தடை உட்பட மற்ற அனைத்து தடைகளும் தொடரும் என கூறப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்