டெல்லியில் ரயில் தீ விபத்து - வெளியான அதிர்ச்சி தகவல்

x

டெல்லியில் உள்ள படேல் நகர் ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயிலில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. பிற்பகல் சுமார் 1:30 மணியளவில் ஏற்பட்ட இந்த தீ விபத்தில் மூன்று ரயில் பெட்டிகள் சேதமடைந்தன. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர், சுமார் 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த விபத்தில் உயிர் சேதம் ஏற்படவில்லை என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும், விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்