"மாணவர்களுக்கு புத்தகம்.." - டெல்லி அரசுக்கு நீதிமன்றம் கண்டனம்

x

டெல்லி மாநகராட்சி பள்ளிகளில் மாணவர்களுக்கு புத்தகம், சீருடைகள் வழங்குவதில் கால தாமதம் ஏற்பட்டிருப்பது தொடர்பான வழக்கு உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்க வந்தது. அப்போது, அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், முதலமைச்சர் கெஜ்ரிவால் சிறையில் இருப்பதால் இந்த விவகாரத்தில் ஒப்புதல் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டு உள்ளது என்றார். நிர்வாக விஷயத்தில் முடிவெடுக்க வேண்டியது, அரசின் கடமை என்றும் இந்த விஷயத்தில் நீதிமன்றம் கருத்து தெரிவிக்க நேர்ந்தால் கடுமையான வார்த்தைகளை பிரயோகிக்க வேண்டும் என்றும் நீதிபதி தெரிவித்தார். அரவிந்த் கெஜ்ரிவால் நாட்டின் நலனைவிட தனிப்பட்ட நலனுக்கே அதிக முக்கியத்துவம் கொடுப்பதாகவும் அதிகாரத்தில் மட்டுமே நாட்டம் கொண்டிருப்பதாகவும் நீதிபதி வேதனை தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்