"ED தான் காத்திருக்க வேண்டும்.." - ஒரே போடாக போட்ட அரவிந்த் கெஜ்ரிவால்

x

டெல்லி அரசின் புதிய மதுபான கொள்கை முறைகேடு வழக்கில், அமலாக்கத்துறை 5 முறை சம்மன் அனுப்பியும் டெல்லி முதல்வர் அரவிந்த் விசாரணைக்கு ஆஜராகாமல் தவிர்த்து வந்தார். இதையடுத்து, அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மனுதாக்கல் செய்தது. இதனிடையே, விசாரணைக்கு ஆஜராகுமாறு அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு, அமலாக்கத்துறை 6 வது முறையாக சம்மன் அனுப்பியது. எனினும், அரவிந்த் கெஜ்ரிவால் விசாரணைக்கு இன்று ஆஜராக மாட்டார் என ஆம் ஆத்மி கட்சி சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அமலாக்கத்துறை சம்மன்கள் சட்டவிரோதமானது என்றும், இந்த விவகாரம் தற்போது நீதிமன்றத்தில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, மீண்டும் மீண்டும் கெஜ்ரிவாலுக்கு சம்மன் அனுப்புவதற்கு பதிலாக, நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக அமலாக்கத்துறை காத்திருக்க வேண்டும் என்றும் ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்