போனில் பதிவான வீட்டில் கேஸ் சிலிண்டர் வெடிக்கும் காட்சி.. ஒரு நொடி நின்று துடித்த இதயம்

x

தெலங்கானாவில் தீ விபத்து ஏற்பட்ட வீடு ஒன்றில், கேஸ் சிலிண்டர் வெடித்து சிதறும் காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஐதராபாத் அருகே அனஜ்பூர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது. இதனால், அந்த குடியிருப்பு கட்ட‌டத்தில் இருந்தவர்கள் வெளியேறினர். அதே நேரத்தில், வீட்டில் இருந்த சிலிண்டர் வெடித்து சிதறியதால், வெளியில் இருந்த மக்கள் அச்சமடைந்தனர். விரைந்து சென்ற தீயணைப்புத்துறையினர், தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இந்த விபத்தில் யாருக்கும் பாதிப்பு இல்லை என்றும், மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்