இந்தியாவில் நிலக்கரி இறக்குமதி குறைந்தது

இந்தியாவின் நிலக்கரி இறக்குமதி 2021 - 22 ஆம் நிதியாண்டில் மேலும் குறைந்துள்ளது...
x

இந்தியாவில் நிலக்கரி இறக்குமதி குறைந்தது

இந்தியாவின் நிலக்கரி இறக்குமதி 2021 - 22 ஆம் நிதியாண்டில் மேலும் குறைந்துள்ளது. கடந்த 2019 - 20 ஆம் நிதியாண்டில் 248 மில்லியன் டன் இறக்குமதி செய்யப்பட்ட நிலையில், 2020-21ம் நிதியாண்டில் 215 மில்லியன் டன் நிலக்கரி மட்டுமே இறக்குமதி செய்யப்பட்டது. இந்தநிலையில் 2021-22 நிதியாண்டில் இந்தியாவின் நிலக்கரி இறக்குமதியானது 209 மில்லியன் டன்னாக குறைந்துள்ளது. 2020-21ம் நிதியாண்டில், 716 மில்லியன் டன்னாக இருந்த அகில இந்திய அளவிலான நிலக்கரி உற்பத்தி, 2021-22 ம் நிதியாண்டில் 777 மில்லியன் டன்னாக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்