இன்று கிளைமேக்ஸ்.. பரபரப்பை எகிறவிடும் 'இந்தியா' கூட்டணி

x

எதிர்கட்சிகள் அடங்கிய இந்தியா கூட்டணியின் ஆலோசனை கூட்டம், இன்று காலை 11 மணியளவில் காணொலி காட்சி வாயிலாக நடைபெற உள்ளது. பல்வேறு மாநிலங்களில் இந்தியா கூட்டணி கட்சிகளுக்கு இடையே, தொகுதி பங்கீட்டை இறுதி செய்வதற்கான பேச்சுவார்த்தை தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தொகுதி பங்கிட்டு பேச்சுவார்த்தையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் மற்றும் அவற்றை இறுதி செய்வது குறித்து, இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்தியா கூட்டணியில், ஒருங்கிணைப்பாளரை நியமிப்பது தொடர்பாகவும் இந்த கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் என தெரிகிறது


Next Story

மேலும் செய்திகள்