"இன்று இரவுக்குள் சந்திரயான்-3" - இஸ்ரோ சொன்ன அதிரடி தகவல்

x

புவிவட்டப்பாதையில் இருந்து நிலவை நோக்கி அனுப்ப‌ப்பட்ட சந்திராயான்-3 விண்கலம், நிலவின் சுற்று வட்டப் பாதைக்குள் நுழைந்த‌து.

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து கடந்த மாதம் 14ஆம் தேதி சந்திரயான் 3 விண்கலம் புறப்பட்டது. நிர்ணயிக்கப்பட்ட புவி வட்டப் பாதைகளில் ஐந்து முறை சுற்றி வந்த சந்திரயான்-3 விண்கலம், கடந்த ஒன்றாம் தேதி, நிலவை நோக்கி செலுத்தப்பட்டது. இந்நிலையில், நேற்று இரவு 7 மணியளவில் நிலவின் சுற்று வட்டப் பாதைக்குள் வெற்றிகரமாக நுழைந்த‌து. இன்று இரவு 11 மணியளவில் விண்கலத்தின் சுற்றுவட்டப்பாதையை குறைத்து, நிர்ணயிக்கப்பட்ட நிலவு சுற்றுவட்டப் பாதையில் சுற்றிவர நடவடிக்கை எடுக்கப்படும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது. வரும் 23ஆம் தேதி சந்திரயான்-3 விண்கலம் நிலவில் தரையிறக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஏற்கனவே சந்திரயான்-2 விண்கலம் தோல்வியடைந்து விழுந்த அதே இடத்தில் லேண்டரை தரையிறக்க மேம்படுத்தப்பட்ட வசதிகள் உள்ளதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். நிலவை சுற்றி வரும் சந்திரயான்-3 விண்கலத்தை விஞ்ஞானிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்