வாபஸ் பெற்ற மத்திய அரசு | Central Government

x

இந்திய மாற்றுத்திறனாளிகள் ஒலிம்பிக் சங்கத்தின் அங்கீகாரத்தை தற்காலிகமாக ரத்து செய்த உத்தரவை, மத்திய விளையாட்டு துறை அமைச்சகம் திரும்ப பெற்றுள்ளது. இந்திய மாற்றுத்திறனாளிகள் ஒலிம்பிக் சங்கத்தினுடைய செயற்குழுவின் பதவிக்காலம் நிறைவடைந்த நிலையில், புதிய உறுப்பினர்களுக்கான தேர்தலை நடத்துவதில் காலதாமதம் ஏற்பட்டது. இதனால், மாற்றுத்திறனாளிகள் ஒலிம்பிக் சங்கத்தின் அங்கீகாரத்தை, மத்திய விளையாட்டு துறை அமைச்சகம் தற்காலிகமாக ரத்து செய்தது. இதனையடுத்து தேர்தல் செயல்முறைகள் தொடங்கப்பட்ட நிலையில், புதிய நிர்வாகிகள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது. இந்தநிலையில், புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்படவுள்ளதையும், மாற்றுத் திறனாளிகளுக்கான துப்பாக்கி சூடுதல் உலகக்கோப்பையை இந்திய மாற்றுத்திறனாளிகள் ஒலிம்பிக் சங்கம் நடத்தவுள்ளதையும் கருத்தில் கொண்டு, அச்சங்கத்தின் அங்கீகாரத்தை தற்காலிகமாக ரத்து செய்த உத்தரவை, மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் திரும்ப பெற்றுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்