ஆட்டம் கண்டது பெங்களூரு..ஊரையே காலி செய்யும் மக்கள் - பள்ளிகளுக்கு ஆன்லைன் கிளாஸ்

x

ஆட்டம் கண்டது பெங்களூரு..ஊரையே காலி செய்யும் மக்கள் - பள்ளிகளுக்கு ஆன்லைன் கிளாஸ்

கர்நாடக மாநிலம், பெங்களூரு நகரில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருவதால் ஒரு சில தனியார் பள்ளிகளும், பயிற்சி மையங்களும் ஆன்லைன் வகுப்பு நடத்த முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.பெங்களூரு நகரில் கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. குறிப்பாக, மகாதேவபுரா, பொம்மனஹள்ளி, பெங்களூரு தெற்கு, ராஜராஜேஸ்வரி நகர், யஷ்வந்தபுரா உள்ளிட்ட பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு அதிகமாக காணப்படுகிறது. நகரில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆழ்துளை கிணறுகள் வறட்சியுடன் காணப்படுவதால் மக்கள், லாரி தண்ணீரை எதிர்பார்க்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். வாடகை வீடுகளில் வசிக்கும் பலர் வீடுகளை காலி செய்துவிட்டு சொந்த ஊருக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. பல்வேறு தனியார் பள்ளிகளும், பயிற்சி மையங்களும் ஆன்லைன் வகுப்பு நடத்த முடிவு செய்துள்ளன.


Next Story

மேலும் செய்திகள்