"சிறையில் கெஜ்ரிவால் உடல்நிலை" - வெளியாகும் பரபரப்புத் தகவல்

x

"சிறையில் கெஜ்ரிவால் உடல்நிலை" - வெளியாகும் பரபரப்புத் தகவல்

ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், டெல்லி அமைச்சருமான அதிஷி முக்கிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்...

அதன்படி, டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் தனது மருத்துவரின் ஆலோசனை மற்றும் இன்சுலின் கோரி நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த நிலையில் அமலாக்கத்துறை மற்றும் சிறை நிர்வாகம் எதிர்ப்பு தெரிவித்ததாகவும், எய்ம்ஸ் மருத்துவரின் டயட் சார்ட்டைப் பின்பற்றினால் அவருக்கு இன்சுலின் தேவைப்படாது என சிறைத்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டார். இந்நிலையில், கெஜ்ரிவாலுக்கு 54 யூனிட் இருக்க வேண்டிய சர்க்கரை அளவு தொடர்ந்து 300க்கு மேல் உள்ளதாகவும், எய்ம்ஸ் மருத்துவரிடம் அரவிந்த் கெஜ்ரிவால் காட்டப்பட்டதாக அமலாக்கத்துறை மற்றும் சிறை நிர்வாகம் நீதிமன்றத்தில் தெரிவித்தது முழுப் பொய் என்றும் அதிஷி சாடியுள்ளார்... அமலாக்கத்துறை மற்றும் சிறை நிர்வாகம் கெஜ்ரிவாலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் வரை எய்ம்ஸின் சர்க்கரை நோய் நிபுணரிடம் காட்டவில்லை எனவும், நீதிமன்றத்தில் அவர் சமர்ப்பித்த உணவு அட்டவணை ஊட்டச்சத்து துறையைச் சேர்ந்த ஊட்டச்சத்து நிபுணரால் செய்யப்பட்டது என்றும் அதிஷி தகவல் தெரிவித்துள்ளார்...


Next Story

மேலும் செய்திகள்