`ராமர் கோயில் வருமானம் தமிழ்நாடு பட்ஜெட்ட விட அதிகம்.. ரிப்போர்ட் சொல்லுது' - அண்ணாமலை

x

சென்னை கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் உள்ள பெரவள்ளூர் பகுதியில் பாஜக சார்பில் காக்கிச்சட்டை பேரணி நிகழ்ச்சி நடைபெற்றது. பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் பொதுக்கூட்டமாக நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் பங்கேற்ற அண்ணாமலைக்கு, வாள், வேல்,மீன், பொம்மை துப்பாக்கி ஆகியவற்றை தொண்டர்கள் பரிசாக கொடுத்தனர். ஆட்டோ ஓட்டுநர்கள் போல் காக்கி சட்டை அணிந்து அண்ணாமலை பங்கேற்றார். நிகழ்ச்சியில் பேசியபோது, சென்னையின் 3 தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் சாமானிய மக்களின் வலி தெரியுமா என்று கேள்வி எழுப்பிய அண்ணாமலை, ஒருமுறை சென்னையில் மோடிக்கு வாய்ப்பு கொடுக்குமாறு கேட்டுக் கொண்டார். ராமர் கோயில் ஏன் என்று கேள்வி எழுப்பியவர்களுக்கு, அடுத்த ஆண்டு அயோத்திக்கு 5 கோடி பேர் செல்வார்கள் என்றும், அதன் மூலம் உத்தரப்பிரதேச அரசுக்கு 4 லட்சம் கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும் என்றும் அண்ணாமலை விளக்கம் அளித்தார்.


Next Story

மேலும் செய்திகள்