கர்நாடகாவில் குண்டு வெடித்த ஹோட்டல் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

x

கர்நாடகாவில் குண்டு வெடிப்பால் பாதிக்கப்பட்ட ராமேஸ்வரம் கபே உணவகம் மீண்டும் சிவராத்தியியன்று திறக்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. பெங்களூருவில் அமைந்துள்ள இந்த உணவகத்தில் கடந்த ஒன்றாம் தேதி குண்டு வெடித்ததில் 9 பேர் காயமடைந்தனர். இதைத் தொடர்ந்து குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடையவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்நிலையில், பெங்களூருவில் செய்தியாளர்களை சந்தித்த உணவகத்தின் தலைமை செயல் அதிகாரி ராகவேந்திரா ராவ், சிவராத்திரி தினத்தன்று உணவகம் மீண்டும் திறக்கப்படுமென தெரிவித்தார்


Next Story

மேலும் செய்திகள்