புனே திரைப்பட கல்லூரியின் தலைவராக நடிகர் மாதவன் நியமனம்

x

மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் திரைப்பட பயிற்சி கல்லூரி புனேவில் இயங்கி வருகிறது. இங்கு, திரைப்பட இயக்கம், எடிட்டிங், ஒளிப்பதிவு மற்றும் ஒலிப்பதிவு துறைகளில் மூன்றாண்டு முதுநிலை பட்டயப் படிப்புகளும் நடிப்பு மற்றும் கலை இயக்குநர் பயிற்சியில் இரண்டு ஆண்டு பட்டயப் பயிற்சி படிப்புகளும் கணினி வரைகலை மற்றும் அனிமேஷன் படிப்புகளில் ஒன்னறை ஆண்டு பட்டயப் படிப்புகளும் வழங்குகிறது. இந்நிலையில், இந்த கல்லூரியின் தலைவராகவும், நிர்வாக குழுவின் தலைவராகவும் மாதவனை மத்திய அரசு நியமித்துள்ளது. அவருக்கு மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவருக்கு, நன்றி தெரிவித்துள்ள மாதவன், எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவேன் என்று உறுதி அளித்துள்ளார். அண்மையில் மாதவன் நடிப்பில் வெளியான ராக்கெட்ரி திரைப்படத்திற்கு மத்திய அரசு தேசிய திரைப்பட விருது வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்