மக்களுக்காக அரசு எடுத்த அதிரடி முடிவு - மீளுமா தலைநகர்? | Delhi | Air Pollution

x

டெல்லியில் காற்று மாசு அதிகரித்து வரும் நிலையில், பல இடங்களில் காற்று மாசை குறைக்கும் வகையில் தண்ணீரை பீய்ச்சியடிக்கும் பணி நடைபெறுகிறது. டெல்லியில் இன்று காலை காற்று மாசு மிகவும் மோசமான நிலையில் உள்ளதாக, மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் தகவல் தெரிவித்துள்ளது. காற்று மாசு காரணமாக மூச்சுவிடுவதில் சிரமம் உள்ளதாகவும், கண்எரிச்சல் ஏற்படுவதாகவும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், டெல்லி லோதி சாலை பகுதியில், காற்று மாசை குறைக்கும் வகையில், ஊழியர்கள் தண்ணீரை பீய்ச்சியடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்