இருசக்கர வாகன விபத்தில் எஸ்.ஐ. உயிரிழப்பு.. ஸ்கூட்டர் சறுக்கி டிவைடரில் மோதி விபத்து

x

டெல்லி பிரகதி மைதான சுரங்கப்பாதையில் இருசக்கர வாகனம் விபத்தில் சிக்கியதில், காவல்துறை உதவி ஆய்வாளர் பவித்ரன் உயிரிழந்தார். கேரளாவை சேர்ந்த பவித்ரன், பணி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த போது, அவரது ஸ்கூட்டர் திடீரென சாலையில் சறுக்கி டிவைடரில் இடித்து விபத்தில் சிக்கியது. இதில் சாலையில் மயங்கி விழுந்த பவித்ரன், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்