திடீரென மாறிய மனம்... ஹைவேஸில் U டர்ன் அடித்த கார் - ஒரு நிமிடம் தாயை நினைத்து உருகி நின்ற ரஜினி

x

நடிகர் ரஜினிகாந்த், 40 ஆண்டுகளுக்கு பின் தன் சொந்த ஊருக்கு சென்றுள்ளார். அது குறித்து விளக்குகிறது இந்த சிறப்புத் தொகுப்பு....

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ரஜினிகாந்த் ஒரு தமிழரல்ல என்ற சர்ச்சை எழுந்த போது, தான் பச்சை தமிழன், என் சொந்த ஊர், நாச்சிக்குப்பம் என கூறி தமிழகத்தையே அதிரவைத்தார் ரஜினி...

இந்த வீடியோவின் 5: 06 ல் இருந்து, 5:50 sec வரை பயன்படுத்தவும்

அந்த நாச்சி குப்பத்திற்குத்தான் ரஜினி காந்த் திடீர் விசிட் அடித்துவிட்டு, சென்னை திரும்பியுள்ளார்...

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனபள்ளி அருகே உள்ள நாச்சிகுப்பம்தான், ராமோஜிராவ் மற்றும் ராமாபாய் தம்பதிக்கு சொந்த ஊர்.... நாச்சிக்குப்பத்தை பூர்விகமாக கொண்ட அவர்களின் மகன் தான், இந்தியாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான ரஜினிகாந்த்....

ஊரில் உள்ள பூர்விக வீடு தரைமட்டமாகிவிட்டது, தற்போது அங்கே புதர்மண்டி கிடக்கின்றது... கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பாக அங்கே 3 ஏக்கரில் நிலம் ஒன்றை வாங்கினார் ரஜினி. அதில் பெற்றோர்களின் வெண்கலச் சிலையை நிருவி அவ்வப்போது, வந்து செல்கிறார் ரஜினியின் அண்ணன் சத்தியநாரயண ராவ்.... ஆங்காங்கே புதர் மண்டியும், செடிகொடிகள் வளர்ந்தும் அந்த நிலம் காட்சியளிக்கின்றது... நடுவில் சின்ன மண்டபம் உள்ளது. கார் நிறுத்துமளவிற்கு ஒரு சின்ன முற்றமும் அங்கே காட்சியளிக்கிறது...

ரஜினியும், தன் பிஸி ஷெட்யூலில், 40 ஆண்டுகளாக சொந்த ஊர் செல்லவில்லை .... இந்த நிலையில்தான், கடந்த நான்கு நாட்களாக பெங்களூருவில் தங்கியிருந்த ரஜினிகாந்த், சாலை மார்க்கமாக சென்னை கிளம்பினார்... திடீரென தன் திட்டத்தை மாற்றியவர், நேராக தன் பூர்விக கிராமத்திற்கு சென்றுவிட்டார்....

ப்ரீத்: ரஜினி சொந்த ஊரில் இருப்பது

சரியாக 10 நிமிடம் மட்டுமே அங்கே இருந்தவர், தன் பெற்றோர்களின் சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு, அங்கிருந்து கிளம்பிவிட்டார்.... பின்னர்தான் அவர் வந்து சென்ற செய்தி ரசிகர்கள் மத்தியில் பரவி, பலரும் நாச்சிக்குப்பத்தில் குவியத் தொடங்கினார்கள். ஆனால் அதற்குள் அவர் கிளம்பிச் சென்றுவிட்டார்..






Next Story

மேலும் செய்திகள்