அடுத்தடுத்து நிகழும் நிலச்சரிவுகள்... மண்ணுக்குள் புதைந்த மனித உடல்கள் - பதைபதைக்கும் காட்சிகள்

x

இமாச்சலப் பிரதேச மாநிலம் சிம்லாவில் கனமழையால் அடுத்த‌டுத்து நிலச்சரிவு ஏற்பட்டு வருகிறது. கிருஷ்ணநகரில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஏராளமானோர் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்கும் பணியில், தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையினர், ராணுவம், காவல்துறையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் 12 பேரின் உடல்களை மீட்டுள்ளனர். அதே நேரத்தில், 21 பேர் உயிரிழந்துள்ளதை உள்ளூர் மக்கள் உறுதி செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விரிசல் ஏற்பட்டுள்ள வீடுகளில் இருந்து பொதுமக்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தில் முதலமைச்சர் சுக்விந்தர் சிங் சுக்கு நேரில் ஆய்வு செய்தார். விரிசல் ஏற்படும் வீடுகளில் இருந்து உடனடியாக மக்கள் வெளியேற வேண்டும் என அவர் அறிவறுத்தியுள்ளார். 10 ஆயிரம் கோடி ரூபாய்க்கு சேதம் ஏற்பட்டுள்ளதாகவும், பாதிப்புகளை சரிசெய்து உள்கட்டமைப்பை மீட்க ஒரு வருடம் ஆகும் என்றும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்