காதலிக்காக யோசிக்க முடியாத செயலை செய்த காதலன் - `கைரேகையால்' வெளிவந்த உண்மை

x

பஞ்சாப் மாநிலம் ஃபரித்கோட் மாவட்டத்திலுள்ள பாபா ஃபரித் சுகாதார அறிவியல் பல்கலைக்கழகம், பல்நோக்கு சுகாதார பணியாளர்களுக்கான தேர்வை நடத்தியுள்ளது. இதில் அதே மாவட்டத்தை சேர்ந்த ஆங்ரேஸ் சிங் என்ற நபர், தனது காதலி பரம்ஜித் கவுர் என்பவருக்காக பெண் வேடமிட்டு தேர்வு எழுத முயன்றுள்ளார். பெண் போல் உடையணிந்து , லிப்ஸ்டிக் போட்டுக்கொண்டு,வளையல் அணிந்து தேர்வு எழுத சென்ற அவர், போலியாக ஆதார் மற்றும் வாக்காளர் அடையாள அட்டைகளையும் தயார் செய்து எடுத்து சென்றுள்ளார். ஆனால் இறுதியில், பயோ மெட்ரிக் கருவில் கைரேகை ஒத்துப்போகாததால், அவர் வசமாக சிக்கியுள்ளார். இதுதொடர்பாக பல்கலைக்கழக நிர்வாகம் அளித்த புகாரின் பேரில், முறைகேட்டில் ஈடுபட முயன்ற ஆங்ரேஸ் சிங்கை போலீசார் கைது செய்துள்ளனர்


Next Story

மேலும் செய்திகள்