இந்தியா கூட்டணிக்கு எதிராக அமையும் பிரம்மாண்ட கூட்டணி?.. சந்திரபாபு நாயுடுவின் அரசியல் யுக்தி

x

வரும் நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் ஆந்திர மாநில சட்டப் பேரவை தேர்தலில், தெலுங்கு தேசம் மற்றும் பாஜக இடையே கூட்டணி ஒப்பந்தம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த சில மாதங்களாகவே, கூட்டணிக்கான பூர்வாங்க முயற்சிகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில், தெலுகு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று சந்தித்து பேசினார். ஏற்கெனவே, கடந் மாதம், அமித் ஷா, பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோரை சந்திரபாபு நாயுடு சந்தித்து பேசிய பிறகு கூட்டணிப் பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் ஏற்படாமல் இருந்தது. அதைத் தொடர்ந்து, ஒரு மாத இடைவெளிக்கு பிறகு பாஜக மேலிடத் தலைவர்களை சந்திரபாபு நாயுடு சந்தித்து பேசி உள்ளார். ஏற்கனவே, பவன் கல்யாணின் ஜன சேனா கட்சியுடன் தெலுங்கு தேசம் கூட்டணியை உறுதி செய்துள்ள நிலையில், அதைத் தொடர்ந்து, பாஜக உடனும் கூட்டணியை உறுதி செய்வதற்கு பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இதனால், பாஜக- தெலுங்கு தேசம் இடையே கூட்டணி குறித்த யூகங்களுக்கு விரைவில் முடிவு எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்