காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (27-01-2024) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines

காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (27-01-2024) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines
  • தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் இன்று வெளிநாடு பயணம்.. உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் தொடர்ச்சியாக ஸ்பெயின் நாட்டிற்கு செல்கிறார்...
  • பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது என்பதே இலக்கு என முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு......... மீண்டும் ஆட்சிக்கு வந்தால், இந்தியாவை சர்வாதிகார நாடாக மாற்றி விடுவார்கள் என்றும் தாக்கு
  • "தமிழ்நாட்டில் பாஜக என்பது பூஜ்ஜியம், அதனால் கவலைப்பட வேண்டியதில்லை..." இந்தியாவை கூட்டாட்சி நாடாக மாற்றும் பொறுப்பு நமக்கு உள்ளதாகவும் முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு...
  • அரசியலமைப்பு சட்டத்தைப் பாதுகாக்க பாஜகவை ஆட்சியில் இருந்து விரட்டியடிக்க வேண்டும் என திருமாவளவன் பேச்சு..... சனாதனத்தை வீழ்த்துவோம், இந்தியா கூட்டணியை வெற்றிபெற செய்வோம் என்றும் முழக்கம்.....
  • "ஜனநாயக நாட்டில் ஒரே குடும்பத்தினர் ஆள்வது சரியல்ல..." எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்...
  • இந்து மதத்தில் சனாதனம் என்று சொன்னாலே போராட்டம் நடத்துகிறார்கள்....... லால் சலாம் பட விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேச்சு.......
  • பிரதமர் மோடி மக்களுக்கான தலைவரா அல்லது கோயில் பூசாரியா என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சனம்... மழையால் பாதிக்கப்பட்ட தமிழக மக்களை பார்க்க ஏன் வரவில்லை என்றும் கேள்வி....
  • தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கை இன்னும் சிறப்பாக மேம்படுத்த வேண்டும்... முதலமைச்சர் ஸ்டாலினிடம் கோரிக்கை விடுத்ததாக காங்கிரஸ் எம்எல்ஏ கே.ஆர்.ராமசாமி பேட்டி..
  • ஐதராபாத்தில் நடைபெற்று வரும் முதல் டெஸ்டில் வலுவான நிலையில் இந்தியா..... முதல் இன்னிங்சில்175 ரன்கள் முன்னிலை...

Next Story

மேலும் செய்திகள்